புனித தலங்களை பாதுகாக்க வலியுறுத்திகடலூரில், ஜெயின் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


புனித தலங்களை பாதுகாக்க வலியுறுத்திகடலூரில், ஜெயின் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புனித தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி கடலூரில், ஜெயின் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

ஜெயின்களின் புனித தலமான ஜார்கண்ட் மாநிலத்தின் சம்தே சிகரம், குஜராத் மாநிலத்தின் சத்ருஞ்ஜய் மலை மற்றும் கிர்னார்ஜி ஆகியவற்றை சுற்றுலா தலங்களாக அறிவித்ததை திரும்ப பெற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, புனித தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி கடலூர் ஜெயின் சங்கத்தினர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயின் கோவில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணை தலைவர் விரேந்தர் குமார் உத்தாட் தலைமை தாங்கினார். செயலாளரும், ஆர்.எம். மஹாவீர் ஜூவல்லரி உரிமையாளமான விஜயகுமார் மேத்தா முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து அவர்கள் ஜெயின் புனித தலங்களை பாதுகாக்க கோரி கோஷங்களை எழுப்பினர், இதில் தில்சுக்மல் மேத்தா, ஆனந்தகுமார் மேத்தா, சோபாக்மல் சான்ட், குசல்ராஜ் தாரிவால், பாரஸ்சி கோட்டாரி உள்பட முக்கியஸ்தர்கள், ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் நடத்தி வரும் நகை, வட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.


Next Story