ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்
ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி வாலிபா் ஒருவா் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொணடாா்
ஈரோடு
இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ெஹல்ெமட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு பயணத்தை பெருந்துறையை சேர்ந்த போட்டோகிராபரான ஞானபிரகாஷ் (வயது 40) என்பவர் மேற்கொண்டு உள்ளார். இவர் கன்னியாகுமரியில் இருந்து சீனாவை ஒட்டியுள்ள இந்திய எல்லை பகுதியான லடாக் வரை ஹெல்மெட் அணிந்து செல்கிறார்.
பெருந்துறையில் இருந்து புறப்பட்ட இவருடைய பயணத்தை, பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவர் பல்லவி பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டு ஞானபிரகாசுக்கு வாழ்த்துகள் கூறினர்.
Related Tags :
Next Story