மோசடி நிலபத்திரப்பதிவை ரத்து செய்ய வலியுறுத்தல்


தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகமலை வட்டாரத்தில் மோசடி நிலபத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கரும்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோவில்பட்டி தாலுகா கழுகுமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில், கழுகுமலை வட்டாரத்தில் உள்ள பல விவசாயிகளின் நிலங்களை, அவர்களுக்கே தெரியாமல் வேறு நபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர். ஆகையால் விவசாயிகள் தங்களுடைய நிலத்தை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. உடனடியாக கலெக்டர் தலையிட்டு முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.


Next Story