அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்


அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
x

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டார பொறுப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அளித்த வாக்குறுதியிலும், அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டிலும் முதல்-அமைச்சர் செய்து கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, சரண் விடுப்பு மற்றும் அகவிலைப்படி உயர்வு அளிப்பது, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது குறித்து பிரசார இயக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசை கண்டிப்பது குறித்து வருகிற 26-ந் தேதி அரியலூர் மாவட்ட அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி மாவட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் உரிமை மீட்பு கருத்தரங்கம் அரியலூரில் நடைபெற உள்ளது. மார்ச் 5-ந் தேதி மாவட்ட அளவில் அரியலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. மார்ச் 24-ந் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், மாநிலம் முழுவதும் அவரவர் பணியாற்றும் பகுதியில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இ்ந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும், என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.


Next Story