அரசு விளம்பர சுவர் இடிந்து கால்கள் முறிந்த மாணவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; சிவசேனா கட்சி வலியுறுத்தல்


அரசு விளம்பர சுவர் இடிந்து கால்கள் முறிந்த மாணவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; சிவசேனா கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Aug 2023 2:30 AM IST (Updated: 5 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

அரசு விளம்பர சுவர் இடிந்து விழுந்ததில் கால்கள் முறிந்த மாணவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

தேனி

சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யனார்-கற்பகவள்ளி தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பெற்றோர் இருவரும் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் சூழ்நிலையில், அவர்களது குழந்தைகள் ஆசாரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். மூத்த மகள் ரூபிகா (வயது 14) 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள சில தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி தொடர்பாக திட்ட மதிப்பீடு, திட்டம் குறித்த விவரங்கள் எழுதப்பட்ட விளம்பர சுவர் கட்டப்பட்டது.

இந்த சுவரின் அடித்தளம் உறுதியாக அமைக்காமல் வெறும் செங்கல் சிமெண்டு மூலம் கட்டப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் அந்த விளம்பர சுவர் இடிந்து, அந்த வழியாக பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ரூபிகா கால்களில் விழுந்தது. அதில் மாணவியின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று, வீட்டில் படுத்தபடுக்கையாக இருந்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து சம்பந்தபட்ட ஒப்பந்ததாரர் மீதோ, அதிகாரிகள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story