வளையப்பட்டி ரேஷன் கடையில் பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆய்வு


வளையப்பட்டி ரேஷன் கடையில் பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆய்வு
x

வளையப்பட்டி ரேஷன் கடையில் பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆய்வு

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டி சந்தைமேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி திடீர் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா? என அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து ரேஷன் கடையை முறையாக பராமரிக்க வலியுறுத்தினார்.

மேலும் ரேஷன் கடையில் கைவிரல் ரேகையை சரிவர பதிவாவதில்லை என்றும், இதனால் பொருட்கள் வாங்குவதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அங்குள்ள வாரச்சந்தைக்கு சென்ற எம்.எல்.ஏ.விடம் சந்தையை சுற்றியுள்ள மண் தரையை கான்கீரிட் தளமானக மாற்ற வேண்டும். சந்தையில் உயர்மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் குறைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவலடி மற்றும் ரமேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story