27 நிறுவனங்களில் தொழிலாளர்த்துறை அதிகாரிகள் ஆய்வு


27 நிறுவனங்களில் தொழிலாளர்த்துறை அதிகாரிகள் ஆய்வு
x

27 நிறுவனங்களில் தொழிலாளர்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் தொழிலாளர்த்துறை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். பதிவு சான்று பெறாமல் பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர்களை கண்டறிதல், அறிவிப்புகள் இல்லாமல் பொட்டல பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது 7 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர்கள் உரிய பதிவு சான்று பெற வேண்டும். சட்டமுறை எடையளவுகள் விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் பொட்டல பொருட்கள் அனைத்தும் உரிய அறிவிப்புகள் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story