பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிகளை அதிகாரிகள் ஆய்வு
பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிகளை அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்
பள்ளிபாளையம்:
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வழித்தட திட்டத்தின் கீழ் பள்ளிபாளையத்தில் இருந்து ஆலாம்பாளையம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை தலைமை மேற்பார்வை பொறியாளர் செல்வநாதன், சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர் தமிழ்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது சிமெண்டு கலவை வேலைகள் சரிவர போடப்படுகிறதா? மேம்பால பணிகளின் விவரங்களை கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது அரசு உதவி பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story