கொலசனஅள்ளியில் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு


கொலசனஅள்ளியில்  மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொலசனஅள்ளியில் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே கொலசனஅள்ளி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு புகார் சென்றது. இங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை அவர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா, பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அடங்கிய குழுவினர் கொலசனள்ளி, வெள்ளிசந்தை ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அதில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 6 குட்கா, புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளில் உரிய காலாவதி தேசி அச்சிடாத தின்பண்டங்கள் மற்றும் உரிய தயாரிப்பு தேதி, முகவரி அச்சிடாத குளிர்பான பாட்டில்கள், குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் 2 கடைகளுக்கும் தலா ரூ.1000 அபராதம் விதித்து மேம்பாட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதனிடையே கொலசனஅள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு மற்றும் மதிய சத்துணவு மையத்துக்கு சென்ற அதிகாரிகள் உணவு மாதிரி மற்றும் குடிநீர் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். மேலும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் ஒரு முறை பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.


Next Story