வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை


வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
x

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.

சிவகங்கை

காளையார் கோவில்,

காளையார்கோவிலில் 221-வது மருது பாண்டியர் குருபூஜை விழா நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பை ஆய்வு செய்யும் வகையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் காளையார் கோவில் பஸ் நிலையம், சொர்ண காளீஸ்வரர் கோவில் முன்பு, மருதுபாண்டியர் நினைவிடம் செல்லும் வழித்தடம் மற்றும் மருதுபாண்டியர் நினைவிடத்தில் ஆய்வு செய்தார்கள். மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்களும், சொர்ணகாளீஸ்வரர் கோவில் முன்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது.


Next Story