சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி வரை உள்ள சாலையை இரு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நெடுஞ்சாலைத்துறை சேலம் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சாலையின் நீளம், அகலம் மற்றும் இதர தரக்கட்டுப்பாடு பணிகளை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தார். மேலும் சாலை பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் பத்மாவதி, தேன்கனிக்கோட்டை உதவி கோட்ட பொறியாளர் திருமால்செல்வன், ராயக்கோட்டை சாலை ஆய்வாளர் கருணாகரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடன்இருந்தனர்.
Next Story