குருங்குளம் சர்க்கரை ஆலையில் அதிகாரி ஆய்வு


குருங்குளம் சர்க்கரை ஆலையில் அதிகாரி ஆய்வு
x

குருங்குளம் சர்க்கரை ஆலையில் அதிகாரி ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரவைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து சர்க்கரைத்துறை அலுவலக அதிகாரியும், தலைமை கரும்பு பெருக்கு அலுவலருமான மாமுண்டி ஆய்வு செய்தார்.அப்போது கரும்பு வெட்டு ஆட்கள் நிலவரம், வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட விவரம், எடைத்தளத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுமேற்கொண்டார். மேலும் ஆலை வளாகத்தில் நுழைவுவாயில் முதல் சர்க்கரை கிடங்கு வரையிலான பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள், கரும்பு இறக்கும் இடத்தில் இருந்து சர்க்கரை கிடங்கு வரையிலான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், அதன் இயக்கங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.மேலும் சர்க்கரை கட்டுமான சோதனை, சிறு உருளை சோதனை செய்யப்பட்ட விவரங்கள், எதிர்பார்க்கும் சர்க்கரை கட்டுமானம் மற்றும் சர்க்கரை கிடங்கில் உள்ள இரும்பு சோதனைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.பின்னர் அரவையின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், செய்யப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலை தலைமை நிர்வாக செந்தில்குமாரி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.


Next Story