தர்மபுரியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் தர்மபுரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் அதிகாரிகள் நேற்று தர்மபுரி நகரம், பஸ் நிலையம் பகுதியை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட அனைத்து விதமான உணவு பொருள் விற்பனை கடைகள், பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகள், ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டர். இந்த ஆய்வின்போது 3 கிலோ அழுகிய பழங்கள், பிளாஸ்டிக் பையில் கட்டி வைக்கப்பட்ட ஒரு லிட்டர் சாம்பார், 3 கிலோ பிளாஸ்டிக் பைகள், 5 கிலோ கார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story