தமிழக கடலோர காவல் படை கூடுதல் இயக்குனர் ஆய்வு


தமிழக கடலோர காவல் படை கூடுதல் இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி பகுதியில் தமிழக கடலோர காவல் படை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி பகுதியில் தமிழக கடலோர காவல் படை கூடுதல் இயக்குனர் டாக்டர் சந்தீப் மிட்டல் ஐ.பி.எஸ். ஆய்வு செய்தார். தொண்டி கடற்கரை காவல் நிலையத்தை ஆய்வு செய்த அவர், அரசு கடலோர காவல் படைக்கு வழங்கியுள்ள கருவிகளை பார்வையிட்டார். அப்போது காவலர்களிடம் அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு ஆவணங்களை பார்வையிட்டு சட்டவிரோத நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் காவலர்கள் தங்களது பணியில் நேர்மையுடனும், துடிப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

பின்னர் கடலோர காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ள படகுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தொண்டி மகாசக்திபுரம் கடற்கரையில் உள்ள கடலோர காவல் படை முகாம் அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது தொண்டி கடற்கரையில் உள்ள ஜெட்டி பாலம் பழுதடைந்து இருப்பதை ஆய்வு செய்தார். பின்னர் தொண்டி அருகே உள்ள சோழியக்குடி கிராமத்தில் படகு தளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இந்திய கடலோர காவல் படை கமாண்டன்ட் அஜித் குமார் ஆஷிக், தமிழக கடலோர காவல் படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்- இன்ஸ்பெக்டர் அய்யனார், பெருமாள், தனிப்பிரிவு தலைமை காவலர் இளையராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story