காரிமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தமிழக அரசின் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கான பல்வேறு பணிகளை கேட்டறிந்தார். மேலும் தாலுகா அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் கீதாராணி, தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story