காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட புலிக்கல், கோவிலூர் ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கூடுதல் கலெக்டரும், திட்ட முகமை இயக்குனருமான தீபனா விஸ்வேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைவாணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வி, உதவி பொறியாளர் ஸ்ரீதர், ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story