மாரண்டஅள்ளி பகுதியில் விவசாய நிலங்களில் மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு
தர்மபுரி
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி மற்றும் அதனை சுற்றுயுள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள், காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் மின்வேலியில் சிக்கி பலியாவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்தநிலையில் விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என மின்வாரிய உதவி பொறியாளர் அருள் முருகன், பாலக்கோடு வனவர் முருகானந்தம் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விவசாய நிலங்களில் ஆய்வு செய்தனர். மாரண்டஅள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சாஸ்திரமுட்லு, அத்திமுட்லு, கெண்டேயனஅள்ளி, கல்லாகரம், ஈச்சம்பள்ளம், பாறைக்கொட்டாய், காளிகவுண்டன் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அனுமதியின்றி மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Next Story