அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கமுதி,
கமுதி தாலுகா பேரையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை தமிழக அரசின் கைத்தறி துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கத்தில் வழங்கப்பட்டுள்ள பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன்கள், வைப்புகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் சங்கத்தின் செயல்பாடுகளையும், ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் செயல்பாடுகளையும் வெகுவாக பாராட்டினார்.
அதிகளவில் பயிர்க்கடன்கள் வழங்கவும், சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கவும், விவசாயிகளின் விளைபொருட்களை கூட்டுறவு நிறுவனங்களே கொள்முதல் செய்து அதிக லாபம் ஈட்டித்தரவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், பயிற்சி கலெக்டர் நாராயணசர்மா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், சரக துணை பதிவாளர் மற்றும் கள அலுவலர்கள் உடனிருந்தனர்.