உள்கட்டமைப்பு பணிகளை மேயர் ஆய்வு


உள்கட்டமைப்பு பணிகளை மேயர் ஆய்வு
x

சேலம் மாநகராட்சி பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேயர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 5-வது வார்டு பெரியபுதூர் பகுதியில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகளான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதி, சுத்தமான குடிநீர் வசதி மற்றும் தரைதளத்தில் பேவர் பிளாக் கல் பதித்தல், படிக்கட்டுகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர்கள் 6-வது வார்டில் உள்ள கோம்பைப்பட்டி நடுநிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, நுழைவுவாயிலில் வளைவு அமைக்கும் பணியை ஆய்வு செய்தனர். இதேபோன்று மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கோவிந்தகவுண்டர் தோட்ட குடியிருப்பு பகுதியில் மழைநீர் உள்புகுவதால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுத்திடும் வகையில் வரட்டாறு ஓடை தூர்வாரும் பணியையும், கோவிந்த கவுண்டர் தோட்டத்திலிருந்து டி.வி.எஸ். ஓடை பாலம் வரை தனியாக மழைநீர் வடிகால் அமைத்து மழைநீரை வெளியேற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மண்டல குழுத்தலைவர் உமாராணி, செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி ஆணையாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் வசந்தா, தனலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story