வணிக வளாகங்களில் தொழிலாளர் துறையினர் ஆய்வு
சேலம் மாநகர் பகுதியில் வணிக வளாகங்களில் தொழிலாளர் துறையினர் ஆய்வு செய்தனர்.
சேலம்
சேலம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் கிருஷ்ணவேணி உத்தரவின் பேரில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், போலீசார், சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் தொழிலாளர் துறை ஊழியர்கள் நேற்று மாநகர் பகுதியில் உள்ள குளிர்பான கடைகள், வணிக வளாகங்களில் குழந்தை தொழிலாளர் பணி அமர்தப்பட்டு உள்ளார்களா? என்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு கடை உரிமையாளர்களிடம் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தப்படக்கூடாது. அவ்வாறு பணிக்கு அமர்த்தினால் 6 மாதம் சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும் குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.
Next Story