அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில்சாலை பாதுகாப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு


அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில்சாலை பாதுகாப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2023 12:30 AM IST (Updated: 18 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

கந்தம்பாளையம்:

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் விபத்தினை தடுப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தணிக்கை குழுவினர் நேற்று ஓமலூர்- சங்ககிரி- திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் பீச்சப்பாளையம் முதல் பரமத்தி வரையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டு, தீர்வுகள் கண்டறியப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் அசோக்குமார், வரதராஜன், உதவி பொறியாளர் கீர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story