சோழர் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஆய்வு
சோழர் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழ்நாடு அரசு சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் மணிவாசன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை ஆணையர் சந்தீப்நந்தூரி, கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு முதன்மை செயலர் மணிவாசன் பேசுகையில், "தஞ்சை மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள சிறப்பு சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்"என்றார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.