கிருஷ்ணகிரி நகராட்சியில்தூய்மை பணிகளை கலெக்டர் சரயு ஆய்வு


கிருஷ்ணகிரி நகராட்சியில்தூய்மை பணிகளை கலெக்டர் சரயு ஆய்வு
x
தினத்தந்தி 2 July 2023 1:15 AM IST (Updated: 2 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்து வரும் தூய்மை பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை பார்வையிட்டார். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் குப்பைகளை அகற்றும் பணியை அவர் பார்வையிட்டு, தூய்மை பணியாளர்களிடம் பணியின் போது பாதுகாப்பு கையுறைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு கலெக்டர் சென்றார். அங்கு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து குறைகளை கேட்டறிந்தார்.

பதிவேடுகள் ஆய்வு

தொடர்ந்து உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வந்துள்ள விவசாயிகள் விவரம், நுகர்வோர்கள் வருகை தொடர்பான பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் விவரம், நுகர்வோர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


Next Story