காட்பாடி ரெயில் நிலையத்தில்சென்னை கோட்ட கூடுதல் பொது மேலாளர் ஆய்வு
சென்னை கோட்ட கூடுதல் பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர்
காட்பாடி ரெயில் நிலையம் ரூ.360 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது. ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட உள்ளது.
இந்த நிலையில் சென்னை ரெயில்வே கோட்ட கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் நேற்று காட்பாடி ரெயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ள திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் குடியிருப்புகள் ரெயில் நிலைய வளாகத்தில் எங்கு அமைய உள்ளது என்பதை ஆய்வு செய்தார் ஆய்வின் போது காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story