ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு


ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு
x

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவமனை வளர்ச்சி குழுவினர் மற்றும் வியாபாரி சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் நலப்பணிகள் இணை இயக்குனர் முருகவேல் நேற்று ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது மருத்துவமனை வளர்ச்சிகுழுவினர்களான ஹரிகரன், துரை சரவணன், ராமகிருஷ்ணன், மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், துணைத்தலைவர் கந்தசிவசுப்பு மற்றும் பலர் இருந்தனர். அப்போது, ஆஸ்பத்திரியை விரைவாக விரிவு படுத்த வேண்டும். ரத்தவங்கி அமைத்திட வேண்டும். காலியாக உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக இணைஇயக்குனர் உறுதியளித்தார். அப்போது தலைமை டாக்டர் வெங்கடேசன், டாக்டர் பொன்இசக்கி மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story