மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆய்வு
மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை தாலுகா குல்லூர் சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளை கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மற்றும் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இவர் இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் முகாமில் உள்ள தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டாக்டர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story