தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு


தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு
x

கீழ்வேளூர், நாகை ஒன்றியத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

தமிழ்நாடு மாநில தொழிலாளர் நலத்துறை ஆணையரின் ஆணைப்படி நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கீழ்வேளூர், நாகை ஒன்றியங்களில் ராதமங்கலம், தேவூர், சங்கமங்கலம், மாதானம் ஆலங்குடி, வடுகச்சேரி கிராமங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் குழந்தை தொழிலாளர்கள் .ஆடு மேய்க்கும் தொழில் மற்றும் செங்கல் சூளைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்களா? என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பணியில் நாகை மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் ராஜாங்கம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அம்சேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மொய்னுதீன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story