அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
x

ஏலகிரிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் பழங்குடியினர் மாணவர்கள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விடுதியில் உள்ள மாணவர்களுக்கு கிரிக்கெட், வாலிபால், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து அத்தனாவூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று டாக்டர்கள் குறித்தும் அவர்களுடைய பணிகள் குறித்தும் நேரில் ஆய்வு ெசய்தார்.

அப்போது பாம்பு, தேள் போன்ற பல்வேறு விஷப்பூச்சிகளின் கடிக்கு மருந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஏலகிரிமலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத்தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story