ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஆய்வு


ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 18 Aug 2023 2:00 AM IST (Updated: 18 Aug 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாடியூர், தென்னம்பட்டி, மோர்பட்டி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் அருண்மணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை கட்டிடங்கள் மற்றும் மராமத்து செய்யப்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கொல்லப்பட்டி சமத்துவபுரத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். அப்போது சமத்துவபுரத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து, போட்டிகள் நடத்தி குழந்தைகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், செயற்பொறியாளர் அனுராதா, உதவி செயற்பொறியாளர் ஷாஜகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதாராணி, ஏழுமலையான் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story