குடியாத்தம் நகராட்சியில் தூய்மை பணியை அதிகாரி ஆய்வு


குடியாத்தம் நகராட்சியில் தூய்மை பணியை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 1 July 2022 5:53 PM IST (Updated: 1 July 2022 5:54 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் நகராட்சியில் நடக்கும் தூய்மை பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் நடந்து வரும் தூய்மைப் பணிகளை வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பி.குபேந்திரன் ஆய்வு செய்தார். குடியாத்தம் அம்பாபுரம் அண்ணா தெரு, தினசரி மார்க்கெட், போடிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது தூய்மைப் பணியாளர்களிடம் தூய்மைப் பணிகளில் ஈடுபடும்போது பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக அணிந்து பணியாற்ற வேண்டும், குடியாத்தம் நகராட்சியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் பாலச்சந்தர், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் சாமுண்டீஸ்வரி, சிவக்குமார், தூய்மைப் பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story