கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆய்வு


கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆய்வு
x

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆய்வு செய்யப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், குற்றம் செய்பவர்கள் தப்பிச்செல்வதை கண்காணிக்கவும், புகழூர் நகராட்சி வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி ஆணையாளர் கனிராஜ், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் அதிகாரிகள், கேமராக்கள் பொருத்தும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொண்ட குழுவினர் புகழூர் நகராட்சி பகுதிகளில் எந்தெந்த முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை செம்படாபாளையம் முதல் கந்தம்பாளையம் வரையிலும், பாலத்துறை முதல் ரெயில்வே கேட் வரையிலும், ரவுண்டானா உள்பட சுமார் 35 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என ஆய்வின் போது முடிவெடுக்கப்பட்டது.


Next Story