அரிசி ஆலைகளில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு


அரிசி ஆலைகளில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு
x

அரிசி ஆலைகளில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர்

திருப்பூர்,

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவின் பேரில், கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, ஈரோடு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள ரேஷன் அரிசி அரைக்கும் அரிசி ஆலைகளில் சோதனை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அரசு கொடுக்கும் நெல்லுக்கு தகுந்த அளவு ரேஷன் அரிசி மூட்டைகள் வழங்கப்படுகிறதா? அரிசி ஆலைகளில் உள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பு விவரம், அரவை ஆலைகளில் அரைக்கப்படும்போது மின்மீட்டர் அளவீடு ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். ரேஷன் அரிசி முறைகேடு நடைபெறாமல் இருக்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள். முறைகேடுகள் பற்றி தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.



Next Story