திருக்கோவிலூர் அருகே ரூ.70 கோடியில் நடைபெறும்4 வழிச்சாலை பணியை அதிகாரி நேரில் ஆய்வு


திருக்கோவிலூர் அருகே ரூ.70 கோடியில் நடைபெறும்4 வழிச்சாலை பணியை அதிகாரி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே ரூ.70 கோடியில் நடைபெறும் 4 வழிச்சாலை பணியை அதிகாரி நேரில் ஆய்வு செய்தனா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் -திருவண்ணாமலை சாலையில் தபோவனத்தில் இருந்து காட்டுக்கோவில் வரை சுமார் 9 கிலோமீட்டர் தூரம் சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 70 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை நெடுஞ்சாலை துறையின் தலைமை பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்புகள் ஆர்.சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கு நடந்து வரும் சாலை பணிகள், வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள், சிறுபாலம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர், சாலையோரம் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல், கோட்ட பொறியாளர் கே.எஸ்.ராஜ்குமார், தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் பி.ஞானவேல், திருக்கோவிலூர் உதவி கோட்ட பொறியாளர் பா.திருநாவுக்கரசு, உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் பு.புகழேந்தி மற்றும் ரா.பிரவீன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story