ரேஷன் கடையில் உதவி கலெக்டர் ஆய்வு


ரேஷன் கடையில் உதவி கலெக்டர் ஆய்வு
x

தேவிசெட்டி குப்பம் ஊராட்சி ரேஷன் கடையில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

வேலூர்

அணைக்கட்டு தாலுகாவில் உள்ள சில ரேஷன் கடைகளில் சரியான அளவில் பொருட்கள் வழங்குவதில்லை என புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி அணைக்கட்டு தாலுகா, தேவி செட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தனர்.

அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா என விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். மேலும் வரிசையில்நின்ற பொதுமக்களிடம் உங்களுக்கு முறையாக பொருட்கள் வழங்குகிறார்களா எனக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் ரேவதி, தேவி செட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம் ஜோதி மணிமாறன் மற்றும் வார்டு உறுப்பினர் உடன் இருந்தனர்.


Next Story