தூய்மை பணியை அதிகாரி ஆய்வு


தூய்மை பணியை அதிகாரி ஆய்வு
x

சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் நகராட்சி 25,26,27-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் பலர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் குபேந்திரன் சோளிங்கர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பஸ் நிலையம், கருமாரியம்மன் கோவில், தக்கான்குளம், திருமலைநகர், கொண்டபாளையம், பழைய தேரடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணியை பார்ைவயிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வீடுகள் தோறும் பொதுமக்கள் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகளை பிரித்து வழங்குகிறார்களா? எனவும் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார். தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக தூய்மைப் பணியாளர்களை பாராட்டினார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையர் பரந்தாமன், துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் எபினேசன், ஜெயராமன், துப்புரவு மேற்பார்வையாளர் நடராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story