நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு


குடவாசல் அருகே மேலராமன்சேத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே மேலராமன்சேத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மேலராமன்சேத்தி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்த கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் கொள்முதல் நிலைய ஊழியரிடம் நெல்லின் தரம் குறித்தும், சரியான எடை உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

மேலும் அவர் விவசாயிகளிடம் பேசும் போது தங்களுடைய நெல்லை இப்பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

நடவடிக்கை

கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய பணம் கேட்டாலோ, அல்லது ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ உடனடியாக தன்னை( கலெக்்டர்) அல்லது முதுநிலை மண்டல மேலாளரை தொடர்பு கொண்டு தகவல் ெதரிவிக்க வேண்டும் என்றும் தகவல் கிடைத்த உடன் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அப்போது அவருடன் உதவி கலெக்டர் சங்கீதா, குடவாசல் தாசில்தார் குருநாதன் உள்பட பலர் இருந்தனர்.


Related Tags :
Next Story