வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு நாள் விழா குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளருமான அருண் ராய், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்கள் நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், இத்திட்டத்தில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும், என்றார். மேலும் அவர் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பெறும் முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டும், இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திலும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் ராய் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.


Next Story