வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகளை கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையருமான ராஜேஷ், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், லாலாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் காலை உணவு வழங்கப்படும் திட்ட செயல்பாடுகள் குறித்து கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார். பின்னர் சுக்காலியூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிர் இழந்த சம்பவ இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தாந்தோணி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதியில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தும், வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்லூரிகளுக்கு செல்வதற்கு முன் ஆங்கில இலக்கியத்தை எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சியின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து நிகழ்ச்சி தொகுப்புகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.


Next Story