மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 24 Dec 2022 12:20 AM IST (Updated: 24 Dec 2022 5:26 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ரமேஷ்சந்த்மீனா பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி சிந்தாமணி ஊராட்சியில் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள், சிந்தாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கல்வி கற்ற மாணவ- மாணவிகளை ஆய்வு செய்தார். அப்போது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கல்வி கற்ற மாணவ-மாணவிகளுடன் உரையாடி அவர்களது திறன் மேம்பாடு குறித்து மதிப்பீடு செய்தார். மாணவ-மாணவிகள் உற்சாகமாக திட்டத்தில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடல்களை பாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதையடுத்து சிந்தாமணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார். மேலசிந்தாமணி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் 2 பயனாளிகளை சந்தித்து அவர்கள் மருந்துகள் பெறும் முறை குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விவரமாக கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அம்பிகாபதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் வகிதாபானு, ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், குருநாதன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story