ஓட்டல், கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு


ஓட்டல், கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
x

ஜோலார்பேட்டை பகுதியில் ஓட்டல், கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்து, கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி ஜோலார்பேட்டை மற்றும் நாடட்றம்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி, ஜோலார்பேட்டையில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், டீக்கடை உள்ளிட்ட 16 கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது லைசன்ஸ் இல்லாமல் கடை நடத்தி வந்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இரண்டு கடைகளில் அதிக வர்ணம் கலந்த 3 கிலோ சிக்கன் இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 2 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஒரு மளிகை கடையில் காலாவதியான மூன்று கிலோ மாவுப்பொருட்களை பறிமுதல் செய்து, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

சாலையோரங்களில் போண்டா, பஜ்ஜி விற்கும் கடைகளில் உணவுப் பொருட்களை கண்ணாடி பாக்சில் வைத்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி உரிமம் பெற வேண்டும் என்றும் உரிமம் பெற்றவர்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.


Next Story