கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
திருப்பத்தூர் பஸ் நிலைய கடைகளில் உவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி நேற்று திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள உணவு சார்ந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்.
மொத்தம் உள்ள 18 கடைகளில் 3 கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. அந்த கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் ஒரு கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளில் காலவாதியான இனிப்புகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story