கொய்யா வயல்களை, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஆய்வு
கொய்யா வயல்களை, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஆய்வு
திருத்துறைப்பூண்டியை அடுத்த கொக்கலாடி கிராமத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடவு செய்யப்பட்ட கொய்யா வயல்களை திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ஒட்டுக்கொய்யா பதியன் தற்போது அரசு தோட்டக்கலை பண்ணை மூங்காநல்லூரில் இருப்பில் உள்ளது. எனவே மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அசல் அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து கொய்யா பதியன் மானியம் பெற்று பயன்பெறலாம் என்றார். ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை அலுவலர் சூரியா, உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேசன், உதவி தோட்டக்கலை அலுவலர் ஹரிஹரன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் (விற்பனை) சக்திவேல் மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் உடன் இருந்தனர்.