கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு


கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
x

கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர்துறை ஆணையருமான அதுல்ஆனந்த் உத்தரவுப்படி திருச்சி கூடுதல் தொழிலாளர்துறை ஆணையர் ஜெயபால், இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் அறிவுரைப்படியும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான கடந்த 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, அவர்கள் சம்மதத்துடன் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களில் 32 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 28 முரண்பாடுகளும் என மொத்தம் 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story