இறைச்சி கடைகளில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு


இறைச்சி கடைகளில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு
x

சாத்தூரில் இறைச்சி கடைகளில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்தனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் இறைச்சி கடைகளில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்தனர்.

கடைகளில் ஆய்வு

சாத்தூர் மற்றும் அதன்சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் இருக்கும் தராசு மற்றும் எடைகற்கள் முறையான அரசு முத்திரை வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்தனர்.

சிவகாசி வட்டார துணை ஆணையாளர் காளிதாஸ் உத்தரவின் பெயரில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பாத்திமா செல்வராஜ் மற்றும் உதவியாளர்கள் சத்யா, சண்முகவேல், கருப்பசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் சாத்தூர், மேட்டமலை, படந்தால், அமீர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அபராதம்

இதையடுத்து கடைகளில் சரியான எடை குறித்த முத்திரை இல்லாத தராசு மற்றும் படிக்கற்களை ஆய்வு குழுவினர் பறிமுதல் செய்தனர். அத்துடன் முறையாக பராமரிக்கப்படாத தராசுகளை வைத்துள்ள கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.

சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்திய ஆய்வில் 60-க்கும் மேற்பட்ட இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஆய்வு செய்ததில் 35-க்கும் மேற்பட்ட தராசு மற்றும் எடைக்கற்களை பறிமுதல் செய்ததுடன், 2 கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் முத்து தெரிவித்தார்.


Related Tags :
Next Story