சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு
சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களான துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு ஆகியவை எங்காவது பதுக்கி வைக்கப்படுகிறதா? என்றும், தனியார் குடோன்கள் மற்றும் பருப்பு ஆலைகளில் இதுபோன்ற பருப்பு வகைகள் அதிக அளவில் பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
அத்தியாவசிய பொருட்களை சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி காந்திமார்க்கெட் அருகே உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தை மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி தலைமையில் பறக்கும் படை தாசில்தார் மற்றும் திருச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்தனர்.