அரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
அரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சேத்திருப்பு கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் புகழேந்தி, வட்டார வள பயிற்றுனர் ஐசக்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மாணவர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல், கணக்கு மற்றும் அதன் நான்கு வகை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி கூறுகையில், தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கி உள்ளதாகவும், மற்றொரு திட்டமான இல்லம் தேடி கல்வித் திட்டம் மாணவர்களிடையே கற்றலை மேம்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். ஆய்வின்போது தலைமை ஆசிரியர் பாலு, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.