காவல் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருப்பத்தூரில் காவல் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள அனைத்து இரண்டு, நான்கு மற்றும் கனரக வாகனங்கள், சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறதா என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் வாகன ஓட்டுனர்கள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் வாராந்திர கவாத்து பயிற்சி, படைக்கலன் மற்றும் பல்பொருள் அங்காடியை பார்வையிட்டார்.
இதில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story