சாலைகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
கொள்ளிடம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
திட்ட அதிகாரி ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால்அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால்படுகை கிராமங்களில் சாலைகள் வெள்ள நீரால் அடித்து செல்லப்பட்டு மிகவும் சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்ட கிராமங்களான ஆனைக்காரன் சத்திரம், நாதல் படுகை, முதலைமேடு திட்டு, தாண்டவன் குளம், திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சி பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அதிகாரிகளிடம் சாலை அமைக்க மதிப்பீடுகளை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ண சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் சிவபிரகாசம்மற்றும் ஒன்றிய பணி ஆய்வாளர்கள் பலர் உடன் இருந்தனர்.