திண்டிவனத்தில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு


திண்டிவனத்தில்    தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு
x

திண்டிவனத்தில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை அதிகாாிகள் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் கோட்டத்திற்கு உட்பட்ட திண்டிவனம், செஞ்சி, வானூர் ஆகிய தாலுக்காவை சேர்ந்த 326 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி திண்டிவனத்தில் உள்ள ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

ஆய்வு பணியை திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் மேற்கொண்டனர். இதன் முடிவில் இதில் 207 வாகனங்கள் தகுதி உடையவை என சான்று அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது, செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகவேல், செஞ்சி சுந்தர்ராஜன், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் இளஞ்செழியன், ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா, தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.


Next Story