பள்ளி வாகனங்கள் ஆய்வு
குடியாத்தத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் எம்.எஸ்.இளங்கோவன், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.செந்தில்வேலன், குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குடியாத்தம் கே.கருணாநிதி, வேலூர் எஸ்.சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் குடியாத்தம், பேரணாம்பட்டு, பரதராமி, கே.வி.குப்பம், லத்தேரி, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள், அவசரகால வழி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, சரியான அளவில் படிக்கட்டுகள் மற்றும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்து தகுதி சான்றிதழ்கள் அளித்தனர்.
மேலும் பள்ளி வாகனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்களும் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளும் பொருத்தி உள்ளதா என ஆய்வு செய்து சான்றிதழ்களை அளித்தனர். இதில் குறைபாடுள்ள 11 வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அந்த வாகனங்களின் குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.